» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் டேபிள் டென்னிஸ் போட்டி : ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி தங்கப்பதக்கம்

திங்கள் 8, ஜூலை 2024 3:11:31 PM (IST)



தென்காசியில் நடைபெற்ற மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில் குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

தென்காசி கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் எம் எஸ் எஸ் சி மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது . போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் சகரியா, மாணவி பிரபாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர். மாணவர்கள் சர்வேஸ்வர் மணிவண்ணன், ஐசக் டேனியல் ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

இரட்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் மாதுரி, ஜோதி பிரியா, முகம்மது இஸ்மாயில், ஐசக் டேனியல், ஆகாஷ், சமிக்தா, சஞ்சனா தேவி, சகரியா ஆகியோர் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், பாத்திமா ரஹ்னா, கேரீஷா, சர்வேஸ்வர் மணிவண்ணன், விக்காஷ் தேவ் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, பள்ளி ஆலோசகரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, பள்ளி சீனியர் முதல்வர் ஜெயஜோதி பிளாரன்ஸ், முதல்வர் சௌமியா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory