» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
சனி 13, ஜூலை 2024 8:55:20 AM (IST)
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று காலை முதல் மதியம் வரையிலும் குற்றாலத்தில் வெயில் அடித்தது. அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் விழுந்தது. மதியத்துக்கு பிறகு சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.
இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை கொட்டியது. இதனால் இரவு 7.45 மணியளவில் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருகி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் அருவிகளை பார்த்துச்சென்றனர்.
இதேபோன்று தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, ஆழ்வார்திருநகரி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் 3.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. சிறிதுநேரத்தில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாயர்புரம் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 4.30 மணியளவில் சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று முன்தினம் 102.1 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. நேற்று வெயிலின் தாக்கம் 102.2 டிகிரியாக உயர்ந்தது. இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் சிரமப்பட்டனர். மாலையில் மேகங்கள் திரண்டு இதமான தென்றல் காற்று வீசியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

மாணவி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி பெண் முதல்வர்,கணவருடன் கைது
புதன் 7, ஜனவரி 2026 8:09:34 AM (IST)

சர்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் கண்காட்சி அரங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:53:57 PM (IST)

திமுக அரசை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்: நெல்லையில் 401 பேர் கைது!
செவ்வாய் 6, ஜனவரி 2026 3:47:24 PM (IST)

சிறுமியை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 8:35:18 AM (IST)

