» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை : முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்!

புதன் 31, ஜூலை 2024 5:00:36 PM (IST)

சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது.

இதைத் தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு 08.09.2022 அன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் விளைவாக இந்த சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.

சீன லைட்டர்களுக்கு தடை விதித்தாலும், வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். மேலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory