» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சியில் வடிவேலு பட ஷூட்டிங் : பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!

சனி 3, ஆகஸ்ட் 2024 5:35:36 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் வடிவேலுவை காண பொது மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ரயில்வே நிலையங்களின் எதிரே கடந்த 2 நாட்களாக படப்பிடிப்பு பணி முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. இந்த காட்சிகளில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் வடிவேலு அங்கு முகாமிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த இடத்தில் ஒரு கேரவனில் வடிவேலு தங்கியிருப்பதை கேள்விப்பட்டு அவரை பார்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் கேரவினை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர். இதனை அறிந்த வடிவேலு, வேனில் இருந்து இறங்கி வெளியே வந்து முகம் கோணாமல் அனைவருடனும் தனித்தனியாக நின்று கொண்டு செல்பி எடுக்க போஸ் கொடுத்தார். பொது மக்கள் போட்டா போட்டி போட்டு அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory