» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் மீது போக்சோ வழக்கு!

வியாழன் 19, செப்டம்பர் 2024 8:33:33 AM (IST)

நெல்லை அருகே வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ஹென்றி செல்வன் ராஜ்குமார். இவர் நெல்லை அருகே ஒரு கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாணவி ஒருவருக்கு வகுப்பறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். இதில் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமாரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டார். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் விசாரணை நடத்தி, ஆசிரியர் ஹென்றி செல்வன் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

NAAN THAANSep 19, 2024 - 11:33:39 AM | Posted IP 172.7*****

ஒரு ஆசிரியரால் குற்றம் செய்த ஆசிரியர் எப்படி காப்பாற்ற படுகிறார் என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அவர்களின் கூட்டு களவாணிதானம் மூலம் அறியலாம்... EDUCATION SYSTEM AND SCHOOL MANAGEMENT HAVE NO PROPER ATTENTION ON THIS BUT THE POLICE DEPT IS BETTER ON THIS CASE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory