» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அம்பாசமுத்திரத்தில் தற்காலிக வார சந்தை : ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்!
சனி 28, செப்டம்பர் 2024 12:37:40 PM (IST)

அம்பாசமுத்திரம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக வார சந்தையினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிக வார சந்தையினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், அம்பாசமுத்திரம் நகர்மன்ற தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், அம்பாசமுத்திரம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலன் கருதி அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலையில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிகமாக வாரச்சந்தை இயங்குவதற்காக அனுமதி பெறப்பட்டு இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த சந்தையில் 30 கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதம் ரூ.711 மற்றும் சதுர அடிக்கு ரூ.3 என்ற விகிதத்தில் குறைந்த வடையில் இதற்கு முன்னர் பழைய வார சந்தையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் வியாபார பெருமக்கள் இந்த தற்காலிக சந்தை சிறப்பாக இயங்குவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்..
இந்நிழ்வில், வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) பூவணன், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் சிவ சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்க சங்கத் தலைவர் மாரியப்பன், விற்பனைக்குழு செயலாளர் எழில் உட்பட அலுவலர்கள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
