» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது!

சனி 5, அக்டோபர் 2024 10:12:39 AM (IST)

கூடங்குளம் முதல் அணு உலையில் கோளாறு சரி செய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதலாவது அணு உலையில் கடந்த 1-ம் தேதி திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.நேற்று காலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. முதல்கட்டமாக 360 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory