» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி!
சனி 5, அக்டோபர் 2024 5:36:25 PM (IST)
தூத்துக்குடியில் தண்டவாள பராமரிப்பு பணி நிறைவு பெறாததால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள 1ஆம் ரயில்வே கேட், பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்.5) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் தற்போது வரை நிறைவு பெறவில்லை.
இதனால் இன்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பவில்லை. இதையடுத்து தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
ராஜ்Oct 6, 2024 - 05:40:01 PM | Posted IP 162.1*****
திருநெல்வேலி தாமதம் என்று எந்தவித அறிவிப்பும் வரவில்லை 8:45 வந்து என்ன பயன்
RajOct 6, 2024 - 05:38:18 PM | Posted IP 172.7*****
5/10/24 அன்று திருநெல்வேலிக்கு 6 மணிக்கு டிக்கெட் எடுத்து காத்துக் கொண்டிருந்தோம்.ஏமாற்றம் மட்டுமே.டிக்கட் எடுத்த பணம் கோவிந்தா கோவிந்தா
P. கண்ணன்Oct 6, 2024 - 10:50:03 AM | Posted IP 162.1*****
முதலில் மக்கள் சிரமமின்றி போக்குவரத்துக்கு வகை செய்யூங்கள் தூத்துக்குடி மாநகராட்சி என்று பெயர் அளவிலேதான் உள்ளதே தவிர ஒரு செயல்பாடும் இல்லை தூத்துக்குடி மக்கள் மாணவ மாணவிகளும் 1&2கேட்டினால் மிகவும் சிரமத்திற்க்கும் துன்பங்கள் நிறைந்த தூத்துக்குடி பகுதியில் வாழ்கின்ற அச்சம் உள்ளாகின்றனர் அதனால தேர்தலுக்கு தேர்தலில் சொல்லுகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் 1&2 ரயில்வே கேட்ல பாளத்தை கட்ட முயற்சி செய்ங்க ஏதேதோ காரத்தை காட்டி தடுக்காதிங்க நாட்டில் எத்தனையோ டெக்னாலஜி வந்துவிட்டது இனியிம் மக்களை முட்டாள் என்றும் ஏமாளி.கோமாளிகள் என்று என்னிவிடாதிர்கள்
RajaOct 5, 2024 - 09:23:50 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடியில் மைசூர் எக்ஸ்பிரஸ் தாமதம் : பயணிகள் அவதி! சனி 5, அக்டோபர் 2024 9:17 PM (IST)  தூத்துக்குடியில் தண்டவாள பராமரிப்பு பணி நிறைவு பெறாததால் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில புறப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள 1ஆம் ரயில்வே கேட், பராமரிப்பு பணி காரணமாக இன்று (அக்.5) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று மாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் 8.45 புறப்பட்டது.. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். முத்துநகர் எக்ஸ்பிரஸ்
( Pearl City express)
இன்னும் தூத்துக்குடியில் இருந்து கிளம்பவில்லை
ராஜாOct 5, 2024 - 09:13:32 PM | Posted IP 162.1*****
முத்துநகர் எக்ஸ்பிரஸ் இன்னும் கிளம்பவில்லை தூத்துக்குடியில் இருந்து.
சென்னை செல்லும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளவும்
RajaOct 5, 2024 - 09:11:28 PM | Posted IP 172.7*****
Departure at 8.45 PM
Deepa SOct 6, 2024 - 09:56:06 PM | Posted IP 162.1*****