» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

திங்கள் 7, அக்டோபர் 2024 10:52:28 AM (IST)

வாசுதேவநல்லூரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர். 

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் சிந்தாமணி பேரிப்புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் மகேந்திரன் (33) . இவர் மீது வாசுதேவநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சிந்தாமணி பேரிப்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மகன் வேல்முருகன்(30). இவர் போலீசார் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

மகேந்திரன் மற்றும் வேல்முருகன் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இருவரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் மகேந்திரன் மற்றும்வேல்முருகன் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory