» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வங்கி பரிவர்த்தனைக்கு காசோலை கட்டாயம் : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவிப்பு
திங்கள் 7, அக்டோபர் 2024 4:17:08 PM (IST)
அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் நவ.1ஆம் தேதி முதல் காசோலை கட்டாயம் என்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் காெண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நகைக்கடன், விவசாய கடன், தொழில் கடன் உள்ளிட்ட வாடிக்கையாளர் சேவை சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், 01.11.2024 தேதி முதல் வங்கி சேமிப்பு / நடப்பு கணக்கில் செய்யப்படும் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலை (Cheque) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆகையால் சேமிப்பு / நடப்பு கணக்கிற்கு காசோலை வசதி பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கேட்டுக் காெண்டுள்ளது.
A.JeniferOct 8, 2024 - 08:27:05 AM | Posted IP 162.1*****