» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் அதிமுக வர்த்தக அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம்

செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:26:02 PM (IST)



தூத்துக்குடியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக வர்த்தக அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப்பெற வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் அதிமுக வர்த்தக அணி சார்பில் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் இன்று பழைய மாநகராட்சி முன்பு மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, தெற்கு வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மீனவணி தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் உட்பட பலர் ஏராளமானோர் கலந்து கொண்டனர், 


மக்கள் கருத்து

வே.தேவராஜ்Oct 8, 2024 - 07:07:13 PM | Posted IP 162.1*****

மேற்கண்ட செய்தி உண்மையா வாலசமுத்திரத்திற்கு டி.ஐ.பி.அனுபியாச்சா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory