» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வெயிலில் காயும் மாணவ, மாணவிகள்: தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் அவலம்!
புதன் 9, அக்டோபர் 2024 12:48:24 PM (IST)
தூத்துக்குடியில் புத்தகத் திருவிழாவில் ஒரே நேரத்தில் பல பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்படுவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
தூத்துக்குடி சங்கரபேரி திடலில் 5வது புத்தகத் திருவிழா அக்.3ம் தேதி துவங்கியது. வருகிற 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் அழைத்துவரப்படுகின்றனர்.
ஒரே நேரத்தில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிகளவில் குவிந்து வருவதால் அரங்குகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்தினறல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மாணவா்களை ஒழுங்குபடுத்தி அரங்குக்குள் அழைத்துச் செல்வதில் சரியான திட்டமிடுதல் இல்லாததால், அதிக நேரம் அவா்கள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது தசரா விழா நடந்து வருகிறது. முத்தாரம்மன் கோவிலுக்கு மாணவ, மாணவிகள் பலர் அணிந்து விரதம் கடைபிடிப்பதால் காலணி அணியவில்லை. இதனால் சட்டெரிக்கும் வெயிலில் அவர்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுதவிர, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைந்த அளவில் இருந்ததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
சமீபத்தில் மெரினா விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில், வெயில் தாங்க முடியாமல் 5 பேர் உயிரிழந்தனர். எனவே, ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பாக மாணவ, மாணவிகளின் நலன் கருதி புத்தகத் திருவிழாவில் அதிக கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். சரியான திட்டமிடல் மற்றும் கால அட்டணை போட்டு பள்ளி மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
ஸ்டாலின்Oct 9, 2024 - 02:52:46 PM | Posted IP 162.1*****
நூற்றுக்கு நூறு உண்மை. மக்கள் துட்டில் இப்படி ஒரு விழா தேவையில்லை. குழந்தைகள் பாவம்தான்.
என்ன உலகம் இதுOct 9, 2024 - 02:12:39 PM | Posted IP 162.1*****
பள்ளி மாணவர்கள் புத்தகங்கள் வாங்க கையில் காசு இருக்குமா? ஒவ்வொரு பள்ளிக்கூடத்தில் அமைத்தால் நல்லா இருக்கும்.
TN69Oct 9, 2024 - 01:56:40 PM | Posted IP 162.1*****
பள்ளி கல்வி துறையின் அழுத்தம் மற்றும் ஆளும் கட்சியின் தந்திரம் 🥺🤭🙄😭
தமிழ்ச்செல்வன்Oct 9, 2024 - 01:17:39 PM | Posted IP 172.7*****
தனியார் பள்ளி மாணவ மாணவிகள் குறைந்தது 300 ரூபாய் கொண்டு வந்து புத்தகம் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அங்கே கருணாநிதி படம் போட்ட புத்தங்களைத்தான் வைத்திருக்கினறனர். மாணவர்களுக்குத் தேவையான அறிவியல், கணினி சம்பந்தமான புத்தகங்கள் அவ்வளவாக இல்லை...
ராஜாOct 9, 2024 - 12:58:56 PM | Posted IP 162.1*****
1ம் வகுப்பு முதல் வரவேண்டுமாம்.மாவட்டம் ஆர்டர்.
kannanOct 9, 2024 - 05:02:51 PM | Posted IP 172.7*****