» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் : குறைந்தபட்ச கூலியை வழங்க கோரிக்கை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 8:43:40 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் குறைந்தபட்ச சட்ட கூலியை வழங்க கோரி இன்று வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வலியுறுத்தி நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் மேயர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், சிஐடியு தலைவர்களும் கலந்து கொண்டனர். ஆனால், குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த முடியாது என மறுத்த ஒப்பந்த நிறுவனம் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று (அக்.22) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபடுவது என்று சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் தூய்மை பணியாளர், ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

PitchuOct 22, 2024 - 10:20:24 AM | Posted IP 162.1*****

குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த முடியாது என மறுத்த ஒப்பந்த நிறுவனம் மறுத்து விட்டதாக தெரிகிறது. CONRACT MATTHU MATHAMATINGILA...COMMISION POYURUMLA....OTTU POTTU JEYIKKA VATCHATHUKKU

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory