» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 3:08:20 PM (IST)



புதுரில் வேளாண்மை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், .

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்தி 70 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உளுந்து, பாசி,கம்பு,சோளம் மக்காசோளம்,மிளகாய் சின்ன வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் மானாவாரி விவசாயம் செய்வது வழக்கம். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் காரணமாக மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வேளாண் பயிர்களும் முற்றிலுமாக சேதமடைந்தது, தூத்துக்குடி மாவட்டம் பேரிடர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களாக தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறிப்பாக விளாத்திகுளம், எட்டையாபுரம்,புதூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம், தாலுகா அலுவலகம் முற்றுகை, தேசிய நெடுஞ்சாலை மறியல், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர்.

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 100க்கு 10% சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் காப்பீடு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது, ஆனால் மீதமுள்ள 90% விவசாயிகளுக்கு தற்போது வரை வங்கிக் கணக்கில் காப்பீட்டுத் தொகை வரவு வைக்கபட வில்லை, இதனால் கடந்தாண்டு விவசாயத்திற்காக வங்கி கணக்கில் வைக்கப்பட்ட நகைகளை திருப்ப முடியாமலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும் விவசாயிகள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர், 

இந்த நிலையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், இழப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து, இன்று புதூர் வேளாண்மை துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர், இந்நிலையில் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதி விவசாயிகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், பேச்சுவார்த்தை முடிவில் முறையான முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு ஏராளமான விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், 

இதனை தொடர்ந்து விவசாயிகள் கூறும் பொழுது, தற்போது விளாத்திகுளம் பகுதிகளில் மானாவாரி விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, நாங்கள் அன்றாட கடன் வாங்கி தான் தற்போது விதை மற்றும் உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றோம், அரசு உடனடியாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிவாரணத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் இல்லை என்றால் விளாத்திகுளம் மற்றும் புதூர், எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory