» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருமணமான 3-வது நாளில் ஐ.டி. நிறுவன ஊழியர் மர்ம சாவு : போலீசார் விசாரணை
வெள்ளி 25, அக்டோபர் 2024 8:50:28 AM (IST)
முக்கூடல் அருகே திருமணமான 3-வது நாளில் ஐ.டி. நிறுவன ஊழியர் மர்மமான முறையில் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் லூர்து அந்தோணி மைக்கேல். இவருடைய மகன் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் (26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவருக்கும், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 21-ந் தேதி திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் மனைவியுடன் சிங்கம்பாறையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மதியம் கறிவிருந்து சாப்பிட்ட அவர்கள் பின்னர் இரவில் இலந்தைகுளத்துக்கு திரும்பி வந்தனர்.
ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் தனது வீட்டுக்கு சென்றதும் இரவில் உணவு சாப்பிட்டார். தொடர்ந்து சிறிதுநேரத்தில் அவருக்கு திடீரென்று வாந்தி ஏற்பட்டது. உடனே அவரை அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் பரிதாபமாக இறந்தார்.
ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் மர்மமான முறையில் இறந்தது குறித்து முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் கயல்விழி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே ஸ்டூவர்ட் வில்லியம்ஸ் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இறந்த ஸ்டூவர்ட் வில்லியம்சின் உடலைப் பார்த்து மனைவி, பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
