» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!

வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)


திருநெல்வேலி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார்குளம் சாலை மற்றும் இதர இடங்களில் போக்குவரத்தினை கட்டப்படுத்தும் பொருட்டு மாநகராட்சி பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில்  மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை  நேற்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பழையபேட்டை இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு வாகன முனையம் மற்றும் விற்பனை சந்தையில் வியாபாரிகள் சங்கம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விற்பனையை தொடங்கியுள்ளனர்.

பொதுமக்கள் இம்முனையத்திற்கு எளிதாக வந்து பொருட்கள் மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் வாங்கி செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரும்புகள் இம்முனையத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இம்முனையத்திற்கு வந்து வாங்கி வியாபாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory