» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை சிறையில் கைதி 'திடீர்' மரணம்: 105 கிலோ கஞ்சா வழக்கில் கைதானவர்!
செவ்வாய் 29, அக்டோபர் 2024 11:07:20 AM (IST)
105 கிலோ கஞ்சா வழக்கில் கைதானவர் பாளையங்கோட்டை சிறையில் திடீரென உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் அய்யனு. இவரது மகன் முருகானந்தம் (30). இவர் கடந்த ஆண்டு சிவகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 105 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு சிறையில் தனது அறையில் இருந்த முருகானந்தத்திற்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறை வார்டன்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முருகானந்தம் இறந்துவிட்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
