» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அரசு எச்சரிக்கை!
புதன் 27, நவம்பர் 2024 11:27:38 AM (IST)
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது. சில நிறுவனங்கள், பேருந்துகளில், கடைகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன.
இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என கூறுவதோ சட்டப்படி குற்றமாகும். எனவே, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை அவமதிக்கும் வகையில், நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடை உரிமையாளர், எரிபொருள் நிலைய உரிமையாளர், வங்கி அலுவலர் மற்றும் பேருந்து நடத்துனர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

குற்றாலத்தில் குளுகுளு சீசன் களைகட்டியது : ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!
சனி 20, ஜூன் 2026 3:26:04 PM (IST)

அரசுக்கு ரூ.1.92 கோடி வருவாய் இழப்பு: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டு சிறை!
சனி 20, ஜூன் 2026 11:31:55 AM (IST)

நெல்லை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 9 பேர் மீது வழக்குப்பதிவு!
சனி 20, ஜூன் 2026 11:03:42 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா கோலாகல தொடக்கம்:ஜூன் 28-ல் பெருந்தேரோட்டம்!
சனி 20, ஜூன் 2026 10:40:35 AM (IST)

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)


