» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!

புதன் 27, நவம்பர் 2024 4:13:16 PM (IST)



தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை வடக்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது. 

பிறந்த நாளை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், துணை முதல்வரை சமூக நலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

Dr.Y.J.A.Kalai SelvanNov 27, 2024 - 04:38:21 PM | Posted IP 162.1*****

On Behalf of BJP Birthday Wishes to Deputy CM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory