» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எழுத்துத் திறன் போட்டி: தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் வெற்றி
வியாழன் 28, நவம்பர் 2024 7:35:35 PM (IST)
வின் நேஷனல் ஸ்பெல் பீ எழுத்துத் திறன் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற வின் நேஷனல் ஸ்பெல் பீ எழுத்துத் திறன் தேர்வு நடைபெற்றது. இப்போட்டியில் இப்பள்ளியை சேர்ந்த 52 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 36 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று பள்ளிகளுக்கிடையேயான போட்டிக்கு (இரண்டாம் நிலைக்கு ) தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.