» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாமனார், மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகன் கைது: குடும்பத் தகராறில் பயங்கரம்!!
திங்கள் 20, ஜனவரி 2025 10:40:47 AM (IST)
நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை மருமகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே உள்ள ஆரோக்கிய நாத புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர்(30) என்ற மகள் இருக்கிறார். ஜெனிபர் அதே தெருவைச் சேர்ந்த மரிய குமார்(36) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், ஜெனிபர் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வேறு ஒருவரை அவர் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மரிய குமார் ஜெனிபரின் வீட்டிற்கு சென்று மாமனார் மற்றும் மாமியாருடன் தகராறு செய்துள்ளார். அதில் வாக்குவாதம் முற்றவே இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளி மரியகுமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




