» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை!
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST)
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு தீர்ப்புக்கு பயந்து விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் மகன் தடிகாரன் (எ) கரும்பன் (62). விவசாயி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் போஸ்கோ வழக்கு நிலுவையில் இருந்து உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு இன்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வர இருந்தது.
இந்த நிலையில் கரும்பன் தனது வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 4, ஜூலை 2025 8:11:08 AM (IST)

ரம்புட்டான் பழவிதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் சாவு: நெல்லையில் சோகம்!!
வெள்ளி 4, ஜூலை 2025 8:07:59 AM (IST)

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

SivaSriFeb 4, 2025 - 02:15:27 PM | Posted IP 172.7*****