» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வள்ளியூர் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை சபாநாயகர் அப்பாவு ஆய்வு!

புதன் 12, பிப்ரவரி 2025 12:50:07 PM (IST)



வள்ளியூர் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆகியோர் தொடக்கி வைத்தும், வள்ளியூர் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள், வள்ளியூர் புதிய சந்தையினை, வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் இன்று (12.02.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி, சாலைவசதி, பேருந்து வசதிகள், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பேருந்து நிலையத்திலிருந்து களக்காடு, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்கும், திருநெல்வேலியிலிருந்து பாபநாசத்திற்கும் செல்லும் வகையில் புதிய பேருந்துகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வள்ளியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கையினை ஏற்று இராதாபுரம் வட்டம், வள்ளியூர் அரசு தலைமை மருத்துமனைக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில், வள்ளியூரில் அரசு தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இம்மருத்துவமனையின் முதல் தளத்தில் டயாக்னாஸ்டிக் சேவைகள், சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இசிஜி போன்ற வசதிகளும், அனைத்து வெளிநோயாளிப்பிரிவுகள், பொது மருத்துவம், மருந்தகம், மகப்பேறு, குழந்தைகள் நலம், ENT, கண் சிகிச்சைப் பிரிவு, எலும்பு மருத்துவம், மனநலம், தோல் பிரிவு, நவீன சமையலறை, பிணப் பரிசோதனை மையமும், இரண்டாம் தளத்தில் அனைத்து உள்நோயாளிப் பிரிவுகள் (ward) பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, கண் பிரிவு, குழந்தைகள் நலம், எலும்பு மருத்துவம், மனநலப் பிரிவு, டயாலிஸிஸ் பிரிவுகளும், மூன்றாம்தளத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு, 4 நவீன அறுவை அரங்குகள் (பொது அறுவை சிகிச்சை, எலும்பு பிரிவு, மகளிர் பிரிவு, கண் நோய் பிரிவுகளும், இதனைத் தவிர முதன்முதலாக Geriatrics (முதியோர்) deaddiction பிரிவு, காச நோய் பிரிவு, HIV சிகிச்சை மையம் போன்ற வசதிகள் இம்மருத்துவமனையில் செயல்படும்.

மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தொடர்ந்து, வள்ளியூரில் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.6.03 கோடி செலவில் திறந்து வைக்கப்பட்ட புதிய சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்தும், ரூ.12.13 கோடி செலவில் வள்ளியூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், இணை இயக்குநர் லதா, வள்ளியூர் கிளை மேலாளர் வினோஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், செயல் அலுவலர் சுப்பிரமணி, முக்கிய பிரமுகர் நம்பி, சேதுராமலிங்கம், வள்ளியூர் பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory