» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணிக்கு 36 பேட்டரி வாகனங்கள் ஒப்படைப்பு!
புதன் 12, பிப்ரவரி 2025 5:17:33 PM (IST)

ஊராட்சிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக 36 மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தலைமையில் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (12.02.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 14 ஊராட்சிகளுக்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக 36 மின்கலன் வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சாமானிய மக்களுக்காகவும், ஏழை எளிய மக்களுக்காவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் , துப்புறவு பணியாளர்களை துப்புறவு பணியாளர்கள் என்று அழைக்ககூடாது தூய்மை பணியாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஊக்கத்தொகை மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000/- வழங்கி அவர்களை தொடர்;ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியாளர்கள் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இராதாபுரம் ஒன்றியத்தில் ஒரு சில ஊராட்சிகளில் கடந்த ஆண்டு சற்று குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது ஆள்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. கும்பிகுளம், சிலாத்திகுளம், சிதம்பராபுரம் ஆகிய ஊராட்சிகளுக்காக நம்பியாற்றின் அருகே கிணறு தோன்டப்பட்டு தற்போது நல்ல தரமான குடிநீர் கிடைக்கப்பெற்று வருகிறது. அதற்கான நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் பைப் லைன் பதிக்கும் வேலைப்பணிகள் முடிவுற நிலையில் உள்ளது. தொடர்ந்து வெள்ளோட்டப்பணிகள் நடைபெற்று, ஏப்ரல் மாதம் முதல் கட்டமாக தாமிபரணி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இராதாபுரம் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்ததாவது: ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின்கலன் வாகனங்களை பயன்படுத்தி ஊராட்சிகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தங்களது ஊராட்சியை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தங்களுடைய ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மேலும் தேவைப்பட்டாலும், பல்வேறு வசதிகள் குறித்து என்னிடம் எந்த நேரமும் ஊராட்சிமன்ற தலைவர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் வைத்த கோரிக்கைகளை ஆய்வு மேற்கொண்டு உங்களது கோரிக்கைகளை சரி செய்வதற்கு விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஊராட்சி மன்ற தலைவர் தூய்மை பணியாளர்களை தூய்மை பணிகளை மேற்கொள்ள எப்பொழுதும் ஊக்கப்படுத்த வேண்டும். ஊராட்சியை எப்பொழும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து முன்மாதிரி ஊராட்சியாக கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இளையபெருமாள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலேக்ஸ், உலகம்மாள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா இசக்கிபாபு, படையப்பா முருகன், அரிமுத்தரசு, காந்திமதி சுரேஷ், ஊராட்சிமன்ற தலைவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
