» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காதல் மனைவியை கொன்று உடலை எரித்த கணவர் கைது: பரபரப்பு தகவல்
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:18:12 AM (IST)
தென்காசி அருகே காதல் மனைவியை கொன்று உடலை எரித்ததாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி அருகே உள்ள இலத்தூர் இனா விலக்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சிலர் நடந்து சென்றனர். அப்போது, அங்கு உடல் கருகிய நிலையில் சுமார் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து இலத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் ஏராளமான மதுபாட்டில்களும் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். பிணமாக கிடந்த பெண் யார் என்பது குறித்து உடனடியாக தெரியாதததால் 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பகுதியில் ஒரு கார் அடிக்கடி கடந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காரின் நம்பர் பிளேட் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என்பது ெதரியவந்தது. தனிப்படையினர் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த காரை அவரது நண்பரான சிவகாசியைச் சேர்ந்த ஜான் கில்பர்ட் என்பவர் ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் ஜான் கில்பர்ட்டை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பிணமாக கிடந்த பெண் குறித்து துப்பு துலங்கியதுடன், பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. அதுபற்றிய விவரம் வருமாறு: சிவகாசியைச் சேர்ந்தவர் ஜான் கில்பா்ட் (33). இவர் பெயிண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் டெய்லரான கமலி (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் 2 பேரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 9-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான் கில்பர்ட் வீட்டில் இருந்த கம்பியால் தனது மனைவி என்றும் பாராமல் கமலியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜான் கில்பர்ட் உடனடியாக தனது உறவினரான தங்க திருப்பதிக்கு (30) தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஜான் கில்பர்ட் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து கமலி உடலை மறைக்க திட்டமிட்டனர். அதாவது வெளியூருக்கு சென்று உடலை எரித்துவிடலாம் என்று திட்டம் தீட்டினார்கள்.
இதற்காக ஜான் கில்பர்ட் தனது நண்பரிடம் காரை வாங்கிவிட்டு வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் கமலி உடலை அடைத்து கார் டிக்கியில் போட்டு புறப்பட்டனர். மறுநாள் இரவில் தென்காசி அருகே இலத்தூர் இனா விலக்கு பகுதியில் முட்செடிகளுக்கு இடையே கமலி உடலை வீசினர். பின்னர் அவரது உடல் மீது தின்னர் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு ெசன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் கில்பர்ட் மற்றும் உடந்தையாக இருந்த தங்க திருப்பதி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
