» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா: 4 மகளிர்கள் உடல் உறுப்பு தானம்

சனி 8, மார்ச் 2025 12:30:22 PM (IST)



திருநெல்வேலியில் மகளிர் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர் மகளிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பரிசுகள் வழங்கி பாரட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மகளிர் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர்கள் அனைவரும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் கலந்து கொண்டு கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு மகளிர்கள் தயாரிக்கப்பட்ட சக்தி மகளிர் இதழை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது "மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர்களுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு கடன் உதவிகளையும் வழங்கி சொந்தமாக சுய தொழில் தொடங்குவதற்கும் சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறார்கள். மகளிர்கள் எப்பொழுதும் தனி திறமையுடன் செயல்படுவார்கள். 

திறமை இந்நாட்டிற்கு மிகவும் முக்கியமானதாகும். மகளிர்கள் தனது குடும்பத்தை மிகுந்த அக்கறையுடன் பார்த்து கொள்வார்கள். இவ்வுலகில் பெண்கள் மிகவும் பெரிய சாதனையாளராக உருவாகி கொண்டிருக்கிறார்கள். பெண்கள் பெரிய உயர் பதவிகளிலும், விஞ்ஞானியாகவும் இருக்கிறார்கள். வேலையில் பணிபுரியும் பெண்கள் குடும்ப பணிகளோடு அலுவலகப் பணிகளையும் சற்றும் களைப்பு இல்லாமல் பார்த்து வருகிறரர்கள். மகளிர் தின விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என தெரிவித்தார்.

மகளிர் தின விழாவில் 4 மகளிர்கள் உடல் உறுப்பு தானம் ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டு உடல் உறுப்பு தானம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) இரா.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி அம்பிகா ஜெயின், துணை ஆட்சியர் பயிற்சி செல்வி.ஜெபி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) காசி, சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் உமா மற்றும் மகளிர் அரசு ஊழியர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory