» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை செய்தபோது ஒருவர் உயிரிழப்பு : 2 திருநங்கைகள் கைது
சனி 8, மார்ச் 2025 3:54:25 PM (IST)
ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்தபோது ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு ஜேஜே நகரில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இவா்களுடன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசா்குளத்தைச் சோ்ந்த சங்கர பாண்டி மகன் சிவாஜி கணேசன் என்ற சைலு (32) என்பவா் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தாா். இவா் ஆணாக இருந்து திருநங்கையாக மாற விரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவாஜி கணேசன் என்ற சைலுவை சில திருநங்கைகள் ரத்த வெள்ளத்தில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இத்தகவல் அறிந்த ஆலங்குளம் மற்றும் கடையம் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனா். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
கடையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், பரும்பு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் மதுமிதா, மகாலெட்சுமி ஆகியோா் ஆணாக இருந்து திருநங்கைகளாக மாற விரும்புபவா்களுக்கு மருத்துவ உபகரணங்களின்றி, அறுவை சிகிச்சை செய்பவா்கள் எனவும், அவா்கள் சிவாஜி கணேசன் என்ற சைலுவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது அதிக ரத்தப் போக்கு காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது. மதுமிதா, மகாலெட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
