» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்பை தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினம்

ஞாயிறு 9, மார்ச் 2025 9:04:29 AM (IST)



அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அஞ்சல் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அஞ்சல் கிராம சபை கூட்டம் 𝘋𝘊𝘋𝘗 அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சல் அதிகாரி தியாகராஜ பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் பொதுமக்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். 

பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அஞ்சல் துறை சுகன்யா சம்ரிதி எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் பிறந்த குழந்தை முதல் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு துவங்கலாம். இந்த கணக்கில் சேமித்த தொகையானது அந்த குழந்தையின் எதிர்கால கல்விக்காகவும் திருமணத்திற்காகவும் பின்னாளில் பயன்படும். 

இந்தக் கணக்கை துவங்குவதற்காக அம்பாசமுத்திரம் முன்னாள் தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி அமுதா அவர்களின் கணவர் ஆஷா சுந்தர், தொழிலதிபர் தனது சொந்த செலவில் கிட்டத்தட்ட 25 ஏழை எளிய பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் கணக்கு தொடங்கி பாஸ்புத்தகம் வழங்கினார். மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட சுமார் 60க்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன. 

இந்த கூட்டத்தின் மூலமாக வந்திருந்த பொது மக்களுக்கு அஞ்சல் சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தொழிலதிபர் பாலசுப்பிரமணியன், இளம் எழுத்தாளரும் சமூக சேவகியுமான நிவிதா இளங்கலை இரண்டாம் ஆண்டு தூய சவேரியார் கல்லூரி, அம்பை உதவி போஸ்ட் மாஸ்டர் கண்ணன், பேராச்சி, சங்கரி, அம்பை உப கோட்ட எழுத்தர் வேல்முருகன், அமலரீனா, அனிஷா, திருமலை குமார், யோகேஷ், மற்றும் தபால்காரர், அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory