» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ள நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பா.மூர்த்தி பாராட்டு தெரிவித்தார்.
தேசிய அளவில் என்.சி.சி. மாணவர்களுக்கு இடையேயான புதிய கண்டுபிடிப்பு போட்டி கடந்த ஜனவரி மாதம் புதுடெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி.யில் உள்ள 9ம் வகுப்பு மாணவன், டேவிட் சாலமோன் தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று தனது கண்டுபிடிப்பிற்காக முதல் பரிசு பெற்றுள்ளார்.
அம்மாணவன், பூமியில் புதைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் உபகரணங்களை கண்டுபிடித்துள்ளார். அம்மாணவனின் கண்டுபிடிப்பு அகில இந்திய அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. முதல் பரிசு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவன் டேவிட் சாலமோனுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பா.மூர்த்தி கேடயம் மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டினார்.
மேலும் அவர் அம்மாணவனுடைய கண்டுபிடிப்பு குறித்து முழுமையாக கேட்டறிந்து அம்மாணவன் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த வாழ்த்தினார். இந்த நிகழ்வில் வரம் அறக்கட்டளை நிறுவனரும் பொறியாளருமான நாகராஜ், தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் என்.சி.சி. அலுவலர் அருள்ராஜ், தமிழ்நாடு என்.சி.சி. 5வது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் பாண்டி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோபாலகிருஷ்ணன், சதீஷ்குமார், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

மிக கனமழை எச்சரிக்கை முன்னேற்பாடு பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
திங்கள் 10, மார்ச் 2025 7:59:52 PM (IST)

போலீஸ் ஏட்டு மனைவிக்கு பாலியல் தொந்தரவு: சப்-இன்ஸ்பெக்டரின் கணவர் கைது
ஞாயிறு 9, மார்ச் 2025 7:18:06 PM (IST)

அம்பை தலைமை அஞ்சலகத்தில் சர்வதேச மகளிர் தினம்
ஞாயிறு 9, மார்ச் 2025 9:04:29 AM (IST)

சிறந்த மொழிபெயர்ப்பு: நெல்லை பேராசிரியைக்கு சாகித்ய அகாடமி விருது!
சனி 8, மார்ச் 2025 5:51:09 PM (IST)
