» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)
கடையநல்லூரில் குடும்ப தகராறில் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் செவல்விளை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (35), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி (30). இவர்களுக்கு ஸ்ரீ (10), பூரணசெல்வி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த 11-ந்தேதி செல்வி திடீரென்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிச்சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, செல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
உடனே கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்வி இறந்தவுடன் முருகன் திடீரென்று மாயமானார். அவர் நேற்று தென்காசி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் குடும்ப தகராறில் மனைவி செல்வியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கியதாகவும், இதில் அவர் இறந்ததாகவும் கூறி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து முருகனை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பொன்பாண்டி உத்தரவிட்டார். முருகனை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)
