» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம் : ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 14, மார்ச் 2025 5:11:01 PM (IST)

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் அமைந்துள்ள தொடக்கநிலை இடையீட்டுச் சேவைகள் மையத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (14.03.2025) அனைத்து குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காதுகேட்கும்திறன், பார்வைதிறன் போன்ற திறன்களை முன்கூட்டியே கண்டறிந்து தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையத்தினை (DEIC) மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவ பிரிவுடன் இணைந்து மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம் (DEIC - District Early Intervention Centre) செயல்பட்டு வருகின்றது. இம்மையத்தில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளான கண்புரை, காதுகேளாமை. அன்னபிளவு, இதய நோய், முதுகு தண்டுவட வீக்கம், முன் கால் எலும்பு வளைவு மற்றும் பிறவி குடல் இரக்கம் போன்ற நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியபட்டு உடனடியாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இம்மையத்தில் மனநலம் சம்பந்தமான ஆட்டிஸம், கற்றல் குறைபாடுகள் மற்றும் தசை குறைபாடுகள் கண்டறியப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரிய அளவில் இருதய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையும், சிறிய குறைபாடுகள்ள குழந்தைகளுக்கு நவீன முறையில் இருதய குறைபாட்டினை போக்கும் கருவிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டு வருகிறது.
இரண்டு வருடங்களில் தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம் மூலமாக 151 இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இருதய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதில் 31 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய குறைபாட்டை நீக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருதய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதிகமான நவீன சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, மருத்துவனையாகும்.
11.03.2025 அன்று இருதவியல் பிரிவு மருத்துவர்களால் 5 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி நவீன உபகரணங்களுடன் இருதய குறைபாட்டை நீக்கும் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் அக்குழந்தைகளை இன்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆய்வின்போது, மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், இருதவியல் துறை தலைவர் ரவி எட்வின், குழந்தைகள் நலத்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, DEIC குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சுப்பையா ஸ்ரீராம், சுந்தரராஜன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வெள்ளி 14, மார்ச் 2025 9:26:13 PM (IST)

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி இளம்பெண்ணை கொன்ற கணவர்: குடும்ப தகராறில் பயங்கரம்!
வெள்ளி 14, மார்ச் 2025 8:46:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)
