» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக வெற்றிக் கழகம் நெல்லை மாவட்ட செயலாளர் அந்தோணி சேவியர் திடீர் மரணம்!

சனி 15, மார்ச் 2025 3:43:19 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். 

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற் கட்சியை தொடங்கி தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

தவெகவில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்ள் பிரிக்கப்பட்டுள்ளன. 95 கட்சி மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் அண்மையில், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை விஜய் அறிவித்தார். 

இன்னும் 6 மாவட்டங்களில் மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது. விரைவில் அந்த மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பாளர்களை நியமனம் செய்வதில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்தகட்டமாக கட்சியின் பொதுக்குழு வருகிற 28ஆம் தேதி கூடுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி என்கிற அந்தோணி சேவியர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கட்சி பணிகளுக்காக சென்னை வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மறைவால் அக்கட்சி தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory