» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

திங்கள் 17, மார்ச் 2025 12:09:48 PM (IST)

களக்காடு அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் மோகன் (54). இவர் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை உடற்கல்வி அறைக்கு தனியாக வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு சென்ற மாணவிக்கு மோகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வெளியே ஓடி வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மோகனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory