» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!

செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

திருநெல்வேலியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.1770 கட்டணத்தில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் கீழ் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள நீச்சல் குளம் மற்றும் சீவலப்பேரி ரோடு கக்கன் நகர் அருகில் அமைந்துள்ள நீச்சல் குளங்களில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் நீச்சல் பயிற்சி திட்டம் 12 நாட்கள் வீதம் 5 பிரிவுகளாக செயல்படுத்தப்படவுள்ளது.
  • 1st Batch` 1.4.2025 To 13.4.2025
  • 2nd Batch 15.4.2025 To 27.4.2025
  • 3rd Batch 29.4.2025 To 11.5.2025
  • 4th Batch 13.5.2025 To 25.5.2025
  • 5th Batch 27.05.2025 To 08.6.2025

பயிற்சிநேரம்
  • காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரை
  • காலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரை
  • காலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரை
  • காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை
  • காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரை (பெண்கள் மட்டும்) பெண் பயிற்சியாளரால் பயிற்சிகொடுக்கப்படும்
  • மாலை 4.00 மணிமுதல் 5.00 மணிவரை
  • மாலை 5.00 மணிமுதல் 6.00 மணிவரை
சிறந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நன்றாக நீந்தும் அளவிற்கு இந்நீச்சல் கற்று கொள் திட்டத்தின் மூலம் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. நீர் நிலை விபத்துக்களில் தங்களையும், தங்கள் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையிலும் மற்றும் உடல் ஆரோக்கியத்தினை பேணிடும் வகையிலும் அனைத்து மக்களும் இந்நீச்சல் பயிற்சியில் கலந்து பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது. 

இப்பயிற்சி முகாமிற்கு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ.1770 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியின் நிறைவு நாளன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்கள் அறிய 9080886563 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory