» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாளுக்யா எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் : தூத்துக்குடி தொழிலதிபர் கோரிக்கை

புதன் 26, மார்ச் 2025 3:56:48 PM (IST)


தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் பயன்பெறும் வகையில் சாளுக்யா எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் அதிபர்  த.ஆனந்த் வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி வேலவன் ஸ்டோர்ஸ் அதிபர் த.ஆனந்த், மத்திய அமைச்சர் எல் முருகனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், திருநெல்வேலியில் இருந்து திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மும்பை தாதர் வரை செல்லும் சாளுக்யா எக்ஸ்பிரஸ் (11022) 15.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை SMVT பெங்களூரு ரயில் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கபடுகிறது. 

அதற்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து 17.40ம‌ணி‌க்கு புறப்பட்டால் தூத்துக்குடியில் இருந்து மும்பை செல்லும் பயணிகள் வாஞ்சி மணியாச்சி அல்லது கோவில்பட்டி வரை மைசூர் செல்லும் ரயிலில் வந்து சாளுக்யா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய முடியும்.

கேரளா வழியாக திருநெல்வேலி வரை இயக்கப்படும் வண்டி எண் 19577-19578, 20923-20924 ரயில்களை வாஞ்சி மணியாச்சி பைபாஸ் வழியாக தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் ஏற்படும் நடைமேடை பற்றாக்குறை குறையும். ரயில்கள் பராமரிப்பு செய்யும் பணிகள் செய்ய மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே அதிகமான இட‌ம் வசதி உள்ளதால் பராமரிப்பு செய்யும் பணிகளை மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 


மக்கள் கருத்து

ராணிMar 28, 2025 - 05:12:09 PM | Posted IP 104.2*****

தூத்துக்குடி ரயில் நிலையம் நெருக்கடியானது.

BhaskaranMar 28, 2025 - 02:13:56 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி மதுரை புதிய ரயில்பாதை திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என்னதான் செய்கின்றனர்

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINMar 27, 2025 - 09:47:51 PM | Posted IP 172.7*****

மதுரை - தேனி பாசஞ்சர் வண்டியை தூத்துக்குடி வரை நீடித்தாலே ஒரு லோக்கல் ரயில் வண்டி வசதி கிடைக்குமே ????? Tuticorin musuru and peralcity விரைவு வண்டிகளை இருமார்க்கங்களிலும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா ???? மக்கள் பிரதிநிதிகளே (MP MLA மேயர்) இதில் கவனம் செலுத்துங்கள்

RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINMar 27, 2025 - 09:39:49 PM | Posted IP 162.1*****

திருவனந்தபுரம் - திருச்சி இன்டர் சிட்டி விரைவு வண்டியை இருமார்க்கங்களிலும் தூத்துக்குடி வரை நீடித்தாலே பல ஊர்களுக்கும் (திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், திருவனந்தபுரம்) செல்லவும் அங்கிருந்து பல வண்டிகளை பிடிக்க நமக்கு சௌகரியமாக இருக்கும். மக்கள் பிரதிநிதிகள் யோசிப்பார்களா ???

பிசிறியுMar 27, 2025 - 07:25:57 AM | Posted IP 104.2*****

அப்படியே முருகன் சாதித்துட்டாலும்...

கனிராஜ்Mar 26, 2025 - 04:19:55 PM | Posted IP 162.1*****

கனிமொழி ஒன்லி விமானத்திற்கு மட்டுமே கோரிக்கை வைப்பார். ஓட்டுப் போட்ட நமக்கு வேட்டுதான்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory