» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் : பொதுமக்கள் அவதி

வியாழன் 17, ஏப்ரல் 2025 8:05:00 AM (IST)



தூத்துக்குடி பூபாலராயர்புரம் 6வது தெரு பகுதியில் சாக்கடை கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் பூபாலராயர்புரம் 6வது தெரு மத்தி பகுதியில்  குடிநீர் விநியோக முறையில் ஏற்பட்டு வரும் குழப்பம் ஒரு புறம் இருக்கும் பட்சத்தில், குடிநீர் சப்ளையில் ஏற்பட்டுள்ள மாயாஜாலம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. குடி நீர் முறையில் வெளிவரும் தண்ணீர் முழுமையாக சாக்கடை நீராகவே வெளிவருகிறது. 

கோடைகால தேவையில் குடி நீரின் அவசியத்தை மாநகராட்சி மறந்துவிட்டதால் இந்த அவலமும், அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த அவலத்தையும், அபாயத்தையும்  உடணடியாக மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து, பொதுமக்களை சுகாதார சீர்கேட்டில் இருந்து  பாதுகாத்திட வேண்டும் என்று பூபாலராயர்புரம் 6வது தெரு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

BabuApr 18, 2025 - 01:35:38 PM | Posted IP 172.7*****

Vari vanguravanga mela fine podanum

இனிApr 17, 2025 - 07:04:16 PM | Posted IP 162.1*****

கொஞ்ச நாள்ல கால்வாய், பாதாள சாக்கடை, மலை நீர் சேகரிப்பு, எல்லாம் சேர்ந்து ஒன்னாகி செப்டிக் டேங்க் ஆறு ஓடும்.

இது தான்Apr 17, 2025 - 07:02:36 PM | Posted IP 172.7*****

உருப்படாத மாநகராட்சியின் சாக்கடை பயலுகளின் வேலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory