» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

வியாழன் 17, ஏப்ரல் 2025 12:53:13 PM (IST)



தூத்துக்குடி பீச் ரோட்டில் கடல் பகுதியில், தனியார் பங்களிப்புடன் மிதக்கும் ஹோட்டல் அமைக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி பீச் ரோடு health zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே கேட் முதல் பெல் ஓட்டல் வரை சாலையின் இருபுறங்களிலும் நடைபயிற்சி செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் பீச் ரோட்டில் கடல் பகுதியில் மிதக்கும்  ஹோட்டல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 

முகாமில் உடனடியாக தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை மேயர் வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலைசெல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, தனலட்சுமி, மும்தாஜ், ராமு அம்மாள், மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

வேஸ்ட் முகாம்Apr 18, 2025 - 04:17:19 PM | Posted IP 172.7*****

வேஸ்ட் முகாம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory