» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

ரேஷன் கடையில் பொதுமக்கள் - விற்பனையாளர் இடையே பிரச்சினை ஏற்படுவதால் பி.ஓ.எஸ். மிஷினுக்கும் எடை தராசிற்கும் உள்ள புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கூட்டுறவு நியாய விலைக் கடைகளின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அ.வேல்முருகேசன் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், "நமது மாவட்டத்தில் கிராமங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் உடல் உழைப்பால் வேலை செய்து வாழ்கிறார்கள். 

அதனால் அவர்களின் கைவிரல் ரேகை தேய்மானம் ஏற்படுகிறது. நியாய விலைக் கடையில் பி.ஓ.எஸ் மிஷினில் ஏற்கனவே நான்கு முறை விரல்ரேகை வைத்தால் தான் விற்பனை களத்தில் உள்ளே செல்ல முடிகிறது.தற்போது பி.ஓ.எஸ் மிஷினுக்கும் எடைத் தராசிற்கும் புளுடூத் இணைப்பு ஏற்படுத்தியதால் நான்காவது முறை விற்பனை களத்தில் செல்லும் முன் புளுடூத் இணைப்பு தடைபடுகிறது. 

இதனால் மீண்டும் வெளியே வந்து ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்க வேண்டியதுள்ளது. இதனால் மேலும் அதிகமாக கால தாமதம் ஏற்படுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 15 நிமிடம் வரை ஆகிறது. இதனால் குடும்ப அட்டை தாரர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகளும் சண்டைகளும் உருவாகிறது. 

ஆகையால் குடும்ப அட்டை தாரர்களுக்கு சீக்கிரமாக பொருட்கள் வழங்குவதற்கும்  தேவையில்லாத பிரச்சினைகளை வராமல் தடுப்பதற்கும். தற்போது பி.ஓ.எஸ். மிஷினுக்கும் எடைதராசிற்கும் உள்ள புளுடூத் இணைப்பை நீக்குவதற்கு ஆவனச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

DMK / BJPApr 19, 2025 - 09:32:09 AM | Posted IP 172.7*****

both state & central action pls.... otherwise you will be lose in further

Raja SolomonApr 18, 2025 - 08:58:57 PM | Posted IP 172.7*****

முதலில் நீங்கள் சரியாக எடை அளந்து கொடுக்கப் பாருங்கள் ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்பட்டது போல் அல்லவா தெரிகிறது

RajeshApr 18, 2025 - 06:04:48 PM | Posted IP 172.7*****

15 nimitam akirathu porulgal vanka oru nabarku

Sathiya seelanApr 18, 2025 - 05:21:09 PM | Posted IP 162.1*****

மக்களை பொருள் வாங்க விடாமல் செய்யும் செயல் செயல் காலவிரயம் மற்றும் விற்பனையாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுத்தும் செயல்

Antonyraj RApr 18, 2025 - 05:21:01 PM | Posted IP 162.1*****

விற்பனையாளருக்கும் பயனாளிக்கும் இந்தபிரச்சனையால் கைகலப்பு ஏற்படும் நிலைமைக்கான வாய்ப்பு அதிகம் எனவேமமம அரசு இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டு ம் அந்தோணிராஜ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory