» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்க பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம்: ஆட்சியர்!
புதன் 30, ஏப்ரல் 2025 10:50:22 AM (IST)
பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவர்கள், பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் வழங்குபவர்களும் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபநாசம், "அருள்தரும் உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலில்” 04.05.2025 தேதி புனவர்த்தன அஷ்டபந்தன திருக்குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. பாபநாச சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் அன்னதானம், மோர் வழங்கப்படும். மேலும் ரோட்டோரங்களில் பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படும்.
உணவு சம்பந்தப்பட்ட கடைகள் அமைப்பவர்கள் மற்றும் இலவசமாக அன்னதானம், மோர் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவுச்சான்றிதழ் பெறுவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அன்னதானம் வழங்குபவர்கள் செயல் அலுவலர் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் அவர்களிடம் முறையாக முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
பாபநாச சுவாமி திருக்கோயில் வளாக பகுதிகளில் தற்காலிக உணவு கடைகள் அமைப்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் கட்டாயம் பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும். இதே போல் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் மற்றும் மோர் வழங்குபவர்களும் பதிவுச்சான்றிதழ் பெறுவது அவசியம் ஆகும். பதிவுச்சான்றிதழை www.foscos.fssai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.
மேலும் பதிவுச்சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் 9385434720, 9994081897, என்ற செல்போன் எண்ணிலும் மற்றும் அன்னதானம் வழங்க அனுமதி பெறுவது குறித்த சந்தேகங்களுக்கு அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரிடம் 9443971789 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது தரமற்ற உணவுகள் விற்பனை செய்தாலோ அல்லது பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினாலோ உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆக மாறுகிறது நெல்லை : பயணிகள் சங்கம் கண்டனம்
திங்கள் 5, மே 2025 12:53:16 PM (IST)

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

TamilanApr 30, 2025 - 11:32:47 AM | Posted IP 162.1*****