» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆக மாறுகிறது நெல்லை : பயணிகள் சங்கம் கண்டனம்
திங்கள் 5, மே 2025 12:53:16 PM (IST)
கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆக திருநெல்வேலி ரயில் நிலையம் மாறுகிறது என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக ரயில் நிலையங்களை கேரள பயணிகளின் வசதிக்காக ரயில்களை நிறுத்தி பராமரிக்கவும், கழுவி விடும் இடங்களாக ரயில்களின் கக்கூஸ் ரயில்வேத் துறை மாற்றியுள்ளது என்று பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். தென் தமிழ்நாட்டில் தற்போது ரயில்களை பராமரிப்பு பழுது பார்க்கும் ரயில் நிலையம் திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மூன்று ரயில் நிலையங்களில் பிட்லைன்கள் வசதி உள்ளது.
ரயில்வே துறையில் பணியாற்றுகின்ற கேரளாவை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு தங்களின் வசதிக்காக தமிழக ரயில் நிலையங்கள் பயன்படுத்திக் கொள்ளும் யுக்தியின் படி இயக்கப்பட்டு வரும் ரயில்கள் நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர ரயில், திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர ரயில், கன்னியாகுமரி - திப்ருகார் தினசரி போன்ற ரயில்கள் ஆகும். இதில் பிலாஸ்பூர் ரயில் மதுரை கோட்டத்தில் பராமரிப்பு செய்யப்படும் மதுரை கோட்ட ரயில் ஆகும்.
ஆனால் இந்த பிலாஸ்பூர் ரயில் சுமார் 1400 கி.மீ இருப்புபாதைகள் கொண்ட மதுரை கோட்டத்தில் இதன் எல்லைக்குள் வெறும் 2 கி.மீ மட்டுமே பயணிக்கிறது. இந்த ரயிலால் மதுரை கோட்டத்துக்கு எந்த வருமானமும் இல்லை. இதுவரை திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையம் தான் கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆக இருந்து வந்தது. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஒரே ஒரு வாராந்திர ரயில் மட்டுமே இவ்வாறு இயங்கி வந்தது. தற்போது இந்த பட்டியலில் திருநெல்வேலி ரயில் நிலையமும் கேரளா ரயில்களின் கழுவும் கக்கூஸ் ஆக மாற இருக்கிறது.
தற்போது திருநெல்வேலியிருந்து பிலாஸ்பூர் க்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயில் தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க தெற்கு ரயில்வே மற்றும் பிலாஸ்பூர் தலைமையிடமாக கொண்ட தெற்கு கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக ரகசியமாக இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள். இந்த திருநெல்வேலி - பிலாஸ்பூர் ரயில் மதுரை,திண்டுக்கல், கரூர், நாமக்கல் சேலம் வழியாக இயக்கப்பட்டால் திருநெல்வேலியிருந்து சேலம் செல்ல வெறும் 382 கி.மீ தூரம் மட்டுமே ஆகும்.
ஆனால் தற்போது இந்த ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், பாலக்காடு , கோயம்புத்தூர், சேலம் வழியாக இயக்கப்படுவதால் 719 கி.மீ தூரமும் அதற்கான கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்யப்பட்டால் இனி திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தினசரி பிட்லைன் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால் திருநெல்வேலியிருந்து மதுரை மார்க்கம் ஒரு தினசரி புதிய ரயில் அறிமுகப்படுத்தி இயக்கப்படுவது நின்றுவிடுகிறது. இதில் குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தனி தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலுவாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்ற செய்ய முடியாத நிலை ஏற்படும் நிலையில் இந்த பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.
திருவனந்தபுரம் - மங்களூர் இரவு நேர ரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றோம். இதற்கு ரயில்வேதுறை சார்பாக திருவனந்தபுரம் - நாகர்கோவில் ஒரு வழி பாதையாக உள்ளது என்று இந்த கோரிக்கையை நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு இதே நெருக்கடி நிறைந்த திருவனந்தபுரம் - நாகர்கோவில் பாதை வழியாக கன்னியாகுமரி – திப்ருகர் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்தனர். தற்போது அதே ஒருவழிப்பாதை வழியாக திருநெல்வேலி – பிலாஸ்பூர் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க அனுமதி அளித்துள்ளார். ரயில்வேயின் இந்த செயல் முரண்பாடாக உள்ளது.
கேரளா பயணிகள் பயன்படும் படியாக ரயில்கள் வேண்டும் என்றால் எவ்வளவு ரிஸ்க் எடுத்தாவது ரயில்களை இயக்குவார்கள். தமிழ்நாடு பயணிகள் பயன்பட வேண்டும் என்றால் பல்வேறு வெற்றி சாக்கு போக்குகள் கொடுத்து அனுமதி கிடையாது.
திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர ரயிலை மதுரை, திருச்சி,விழுப்புரம் வழியாக சென்னை வரை நீட்டித்து இயக்க கோரிக்கை: சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து இருவழிப்பாதையாக பணிகள் முடிந்துள்ள நிலையில் முதலில் மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து இயங்கும் சார்மினார் ரயில் மற்றும் கிராங் டிரங் தினசரி ரயில்கள் மதுரை, திருநெல்வேலி வழியாக தமிழ்நாட்டின் மாநிலத்தின் கடைசி பகுதியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரயில்வேதுறை தயாராக இல்லை அல்லது கோரிக்கைக்கு ஆதரவு அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதற்கு மாற்றாக நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியிருந்து கேரளா வழியாக இயங்கும் ரயில்களை மதுரை, திருச்சி வழியாக சென்னை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
திருநெல்வேலியிருந்து கேரளா வழியாக சுற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயிலை தினசரி ரயிலாக ரயில்வே அதிகாரிகள் மாற்றித்தான் இயக்குவேன் என்று அடம் பிடிப்பார்கள் என்றால் தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி இந்த திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர ரயிலை மதுரை, திருச்சி,விழுப்புரம் வழியாக சென்னை தாம்பரம் வரை நீட்டித்து தாம்பரம் - பிலாஸ்பூர் என்று இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
பிலாஸ்பூரில் இருந்து கேரளாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் திருவனந்தபுரத்துடன் இறங்கிவிடுவார்கள். திருவனந்தபுரத்திலிருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில் காலியாகத்தான் யாருக்கும் தெரியாமல் நடு இரவில் இயக்கப்பட்டு வரும். இவ்வாறு காலியாக வந்து திருநெல்வேலியில் பராமரிப்பு செய்வதை காட்டிலும் இந்த ரயிலை அப்படியே மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக தாம்பரம் வரை நீட்டித்து இயக்கி ஒரே ரயிலாக தாம்பரம் - பிலாஸ்பூர் இயக்கி கொள்ளலாம்.
தற்போது இந்த பாதை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ரயிலை தாம்பரம் வரை இயக்குவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க போவதில்லை. தற்போது வாராந்திர ரயிலாக இயங்கும் இந்த ரயில் வாரத்திற்கு மூன்று நாட்கள் திருநெல்வேலியில் காலியாக ரயிலின் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக இந்த வாராந்திர ரயிலை தாம்பரம் வரை நீட்டிப்பு செய்து தாம்பரம் -பிலாஸ்பூர் என்று இயக்க வேண்டும். இந்த ரயிலின் பராமரிப்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் செய்து கொள்ளலாம்.
சென்னை சென்ட்ரல் - பிலாஸ்பூர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு: தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழி பாதை பணிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் சென்னையிலிருந்து பிலாஸ்பூர் இயக்கப்பட்டு வரும் வாராந்திர ரயிலை தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்;டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)
