» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மானூர் அருகே நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு : ஆட்சியர் தொடங்கி வைத்தார்

புதன் 30, ஏப்ரல் 2025 5:10:03 PM (IST)



மானூர் அருகே வன்னிக்கோனேந்தல் பகுதியில் நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், வன்னிக்கோனேந்தல் பகுதியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையினர் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் மூலம் ஆயத்த ஆடை தயார் செய்வதற்காக அன்னை தெரசா, வெற்றிவேல் மற்றும் விநாயகா ஆகிய மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த தலா 10 குழு உறுப்பினர்கள் என 30 குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த உறுப்பினர்கள் மூலம் ஆயத்த ஆடைகள் தயார் செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ஒரு குழுவிற்கு ரூ.3 இலட்சம் வீதம் ரூ.9 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று நவீன ஆயத்த ஆடைகள் உற்பத்தி அலகு மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தின் மூலம் ஆடைகள், துணிகளை தைப்பதற்கான நூல்கள் அனைத்தையும் அந்நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும். ஆடைகளை தைத்து, அந்நிறுவனங்களுக்கு மீண்டும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆடைகளுக்கும் தைப்பதற்கான கூலித் தொகை அந்தந்த சுய உதவிக்குழுக்களுக்கு அந்நிறுவனங்கள் மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் அலகு மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர்களின் வாழ்வாதாரம் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மானூர் வட்டம் வன்னிக்கோனேந்தல் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மின்னணு பயிர் கணக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசெல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் செல்வி ஸ்ரீலேகா, துணைத்தலைவர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், வட்டார இயக்க மேலாளர் (மகளிர் திட்டம்) ரமேஷ், உதவி திட்ட அலுவலர் விக்டர் பெர்னாண்டோ, ஒன்றிய குழு உறுப்பினர் உடையம்மாள் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory