» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10. லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 9, ஜூன் 2025 4:29:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.06.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு. இரா.சுகுமார், 12 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, திருநெல்வேலி வட்டம் கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்த் மகேந்திரன் என்பவரை பாம்பு கடித்து இறந்தமைக்காக அன்னாரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும், அம்பாசமுத்திரம் வட்டம், அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் நீரில் மூழ்கி இறந்தமைக்காக அன்னாரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.02 இலட்சம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
