» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
திங்கள் 9, ஜூன் 2025 5:18:17 PM (IST)
நெல்லை அருகே மரப்பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
நெல்லை மாவட்டம் அருகன்குளம் பகுதியில் முத்து என்பவருக்கு சொந்தமான பழைய குடோன் உள்ளது. இந்த குடோனில் பழைய மர சாமான்கள் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணிக்கு பிறகு மின்கசிவு காரணமாக குடோனில் மர பொருட்களில் லேசான தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீ அதிகளவில் பரவி அங்குள்ள மர சாமான்கள் பற்றி எரிந்தது. தீவிபத்து குறித்து தகவல் அறிந்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 6 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நிற போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. குடோனில் இருந்த அனைத்து பொருட்களின் தீயில் கருகி நாசமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவினால் தான் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையின் விசாரித்து வருகின்றனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
