» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வியாழன் 12, ஜூன் 2025 12:37:21 PM (IST)

திருநெல்வேலியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12.06.2025) குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கையெழுத்திட்டு தொடங்கி வைத்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், 15 முதல் 18 வயது வரை உள்ள வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்பணர்வு ஏற்படுத்துவேன் என்றும் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொக்கிரகுளத்தில் உள்ள அறிவியல் மையத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும்; மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டியும், 11 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டுரைப் போட்டியும் இன்று நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டுவில்லைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரிய நிறுவனங்களில் தொழிலாளர்கள் மத்தியல் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, உதவி ஆட்சியர் பயிற்சி தவலேந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் திருவள்ளுவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 4, ஜூலை 2025 8:11:08 AM (IST)
