» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குலசை கடற்கரையை விரிவு படுத்தவேண்டும் : ஆட்சியரிடம் கோரிக்கை!

திங்கள் 14, ஜூலை 2025 3:28:48 PM (IST)

குலசேகரன்பட்டினம் தசாரா திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை விரிவுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தெடர்பாக சமூக சேவகர் ராமச்சந்திரன் புலவர் என்பவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துகுடி மாவட்டம் கன்னியாகுமரி சாலை வழி திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தி முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நேரத்தில் பக்தர்கள் அலை அலையாய் வருகின்றார்கள். இந்த வேளையில் இடம் பற்றாகுறையினால் பக்தர்கள் அவதிபடுகிறார்கள். 

இதை சரி செய்ய கடல் கரையை விரிவு படுத்தி (Beach) அங்கே பேருந்து வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். கோவிலுக்கு பின்னால் மணப்பாடு கூடல் நகரில் ஏவுகணை தளம் ஆரம்பமாக இருக்கிறது. உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள், திருச்செந்தூர் சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கடற்கரையை விரிவு படுத்துவதால் இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் வசதியாக இருக்கும். 

இந்த மூன்றும் அமைவதால் அரசாங்கத்திற்கு வருமானமும் பொது மக்களுக்கு கோவிலுக்கும் கடற்கறைக்கும் செல்ல வசதியாக இருக்கும். அக்டோபர் 2023ல் நடந்த திருவிழாவில் சுமார் இருபது லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்த எண்ணிக்கை வருடா வருடம் கூடிக்கொண்டே இருக்கிறது. கடற்கரையை விரிவு படித்தினால் பக்தர்கள் ஒன்றாக இருந்து திருவிழாவினை கண்டுகழிக்க வசதியாக இருக்கும். 

கடற்கரைக்கு பேருந்து செல்லும் வழிதடம் காமராஜ் நகர் வழியாக கடற்கரை, மேல் மலையான் தெரு (முத்தாரம்மன் கோவில் பின்புரம்). குலசை ரைஸ்மில், குலசை காவல் நிலையம் ஏற்கனவே சாலை வசதி இருப்பதால் இதனை அமுலுக்கு கொண்டுவர வசதியாக இருக்கும். இது தொடர்பாக ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

M BabuJul 14, 2025 - 07:10:16 PM | Posted IP 162.1*****

yethum pirachanai vanthal kadal la sunamai mathiri vanthal baktharkal nilamai?oorukula irukura pirachanai yellm ivar sari panitara?athu sampanthama manu kuduthara kadai yelam yedupavargal yevlo thokai vasool panranga nu theriyuma toilet vasathi yellam panniyacha atha yellam innum sari panalaye

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory