» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் பயணிகள் சங்கம் கோரிக்கை!
வெள்ளி 3, அக்டோபர் 2025 12:36:14 PM (IST)

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக்குயில் உமர் பாரூக், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி நிலையத்தில் தினந்தோறும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 1.33 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மீட்டர் கேஜ் காலத்தில் மூன்று தண்டவாளங்களுடன் 24 மணி நேரமும் நிலைய மேலாளருடன் பிளாக் ஸ்டேஷன் அந்தஸ்து பெற்று இருந்தது. அகலப் பாதையாக மாற்றப்பட்டப் பிறகு தரம் குறைக்கப்பட்டு,ஒற்றைத் தண்டவாளத்துடன் இயங்கி வருகிறது.
மதுரை ரயில்வே மண்டலத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் 22 ஆம் இடத்தில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. இத்தகு சிறப்பு பெற்ற கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!
சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
சனி 8, நவம்பர் 2025 8:47:30 AM (IST)

கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வில் வினாத்தாள் மாறியதால் பரபரப்பு
வெள்ளி 7, நவம்பர் 2025 8:44:49 AM (IST)

குடும்பத் தகராறில் சரமாரியாக வெட்டிய வாலிபர் : மாமியார் உயிரிழப்பு, மனைவி படுகாயம்!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:30:36 AM (IST)

தாமிரபரணி கரையில் பனை விதைகள் விதைக்கும் விழா: சபநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்!
வியாழன் 6, நவம்பர் 2025 5:16:48 PM (IST)





Monnamohamed M rtd. Prison dept. Officio Kallidai kurichiOct 5, 2025 - 04:31:56 PM | Posted IP 162.1*****