» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சமூக வலைதளங்களில் பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக கருத்து: யூடியூபர் கைது!
சனி 4, அக்டோபர் 2025 4:10:41 PM (IST)
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக முகத்தை மூடி பேசி வந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த திலீபன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் திலீபன் (35), - உளறி கொட்டவா - எனும் தனது யு-டியூப் பக்கத்தில் பெண்களை அவ மதிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகள் அதிக மாகப் பிறப்பதால் பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் உரிமையை பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகவும் திலீபன் பேசினார்.
தமது முகத்தை பாதியாக மறைத்துக் கொண்டு வீடியோ வெளியிடும் அவர் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தென்காசி சைபர் கிரைம் பிரிவிற்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்திய போலீசார், திலீபனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)




