» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!

புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)



கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணியினை உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, துவக்கி வைத்தார். 

பாரம்பரிய பனைமரம் வளர்ப்பதன் மூலம் கண்மாய், ஏரி, ஊரணி கரை மற்றும் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்யும் போது நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் 5 இலட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்திலுள்ள பள்ளகுளம் கண்மாய் கரையில் மாபெரும் பனை விதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கங்கைகொண்டான் நம்ம ஊரு குளோபல் ஸ்கூல், அரசு மேல்நிலை பள்ளி கங்கைகொண்டான், சங்கர் நகர் ஜெயந்திரா பள்ளி, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளர்கள் என அனைவரும் இணைந்து பனை விதைகளை நட்டனர்.

இந்நிகழ்வில், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து, மாவட்ட வனச்சரக அலுவலர் ஜெய பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் பெளிக்ஸ் பிரான்சி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory