» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)
போக்சோ கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டை சிறையில் டி.ஐ.ஜி. முருகேசன் விசாரணை நடத்தினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் வினோத்குமார் (30). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனால் தென்காசி அனைத்து மகளிர் போலீசார் அவரை பிடித்து சமீபத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் வினோத்குமார் தனது துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த நிலையில் சிறைத்துறை டி.ஐ.ஜி. முருகேசன் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறைக்கு வந்தார். அவர் சிறையில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. வினோத்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது முழுமையாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:55:36 AM (IST)

சிப்காட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:06:50 PM (IST)
