» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி, செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சனி 11, அக்டோபர் 2025 12:09:07 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு நெல்லை, செங்கல்பட்டு இடையே அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "தீபாவளி பண்டிகையின்போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்:

ரயில் எண்: 06156 திருநெல்வேலி – செங்கல்பட்டு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 01.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் (2 சேவைகள்).

மறுமார்க்கத்தில் ரயில் எண்: 06155 செங்கல்பட்டு – திருநெல்வேலி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் அக்டோபர் 21 மற்றும் 22 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.55 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் (2 சேவைகள்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory